மேற்குவங்க பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜிக்கு கரோனா

பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி
பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி

மேற்குவங்க பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கம் ஹூக்ளி மக்களவைத் தொகுதி எம்.பியும், பிரபல நடிகையுமான பாஜகவைச் சேர்ந்த லாக்கெட் சாட்டர்ஜிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. கடந்த ஒரு வாரமாக தனிமைப்படுத்தலில் இருந்தேன். இன்று காலை கரோனா தொற்று  இருப்பது உறுதி ஆகியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அவருக்கு மேற்குவங்க பாஜக பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஜூன் 19 அன்று அவர் லடாக் எல்லையில் உயிரிழந்த மேற்குவங்க வீரர் ராஜேஷ் ஓரங்-இன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். இதில் பாஜக எம்.பி. சவுமித்ரா கான், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநில அமைச்சர்கள் சந்திரநாத் சின்ஹா, ஆஷிஷ் பானர்ஜி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

அதேபோன்று,  ஜூன் 24 ஆம் தேதி ஹவுராவில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com