திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு

திருப்பதி கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயுல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்


திருப்பதி: திருப்பதி கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயுல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் கோயிலில் பணியாற்றும் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட் டு வருகிறது. எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com