கரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 முதல் பயன்படுத்தலாம்: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. 

இதில், இந்தியாவில் முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத்  தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. 

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) டி.ஜி. பல்ராம் பார்கவா, பாரத் பயோடெக் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முதன்மை ஆய்வாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஜூலை 7 ஆம் தேதி முதல் தொடங்கும் சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தடுப்பூசியை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், BBV152 என்பது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். அரசின் மிக உயரிய அளவில் கண்காணிக்கப்படும் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஐசிஎம்ஆர்-தேசிய வைராலஜி நிறுவனத்தால் தனிமைப்படுத்தப்பட்ட SARS-CoV-2 லிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.  தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைந்து கண்காணிக்க 12 மருத்துவ நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com