விதிமுறைகளுக்கு உட்பட்டே கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர்

சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு கரோனா தொற்றுநோய் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்


புது தில்லி: சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு கரோனா தொற்றுநோய் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கரோனா தொற்றுநோய் தடுப்பு மருந்தை, விதிமுறைகளுக்கு உட்பட்டு விலங்குகள், மனிதர்களிடம் பரிசோதனை நடத்த இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக போராடி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. 

கரோனா தொற்றுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதை விட, அதன் பாதுகாப்பை உறுதி செய்வது, மருந்தின் தரம், தடுப்பு மருந்துக்கான அனைத்தும் தடுப்பு மருந்தில் இருப்பதை உறுதி செய்வது போன்றவையும் மிக முக்கியம்.

விஸ்வரூபம் எடுத்துவரும் கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க இதற்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் ஹைதராபாத்தைச் சோ்ந்த பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்துடன் ஐசிஎம்ஆா், தேசிய தீநுண்மியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியது. இந்த தடுப்பு மருந்துக்கு ‘கோவேக்ஸின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஆராய்ந்த மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மனிதா்களுக்கான மருத்துவ சோதனைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாடு முழுக்க 12 மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மருத்துவ சோதனை தளமாக தோ்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்க மிக அவசரம் காட்டி வரும் நிலையில், ஐசிஎம்ஆர், சர்வதேச விதிகளுக்கு உள்பட்டே, கரோனா தொற்றுநோய் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது. 

ஆய்வக சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட மற்றும் மனிதர்களுக்கு மருந்தி உள்செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. 

இதில் சிவப்பு நாடா முறையை ஒழித்துவிட்டு, மிக முக்கியமாகச் செய்ய வேண்டிய நடைமுறைகள் எதையும் தவிர்த்துவிடாமல், பரிசோதனையில் பங்கேற்கும் நபர்களை தேர்வு செய்வதை விரைந்து நடத்த ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மேலும், ஐசிஎம்ஆர் கரோனா சிகிச்சையில் பாதுகாப்பு, இந்திய மக்களின் நலன் ஆகியவைதான் மற்ற எதையும் விட அதிக முக்கியத்துவம் தரும் விஷயங்களாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com