ஆகஸ்ட் 15- க்குள் கரோனா தடுப்பு மருத்தை அறிமுகப்படுத்த ஐசிஎம்ஆா் திட்டம்

உள்நாட்டில் உருவாக்கப்படும் கரோனா தடுப்பு மருந்தை வருகின்ற சுதந்திர தினத்திற்குள் (ஆக.15) அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்

உள்நாட்டில் உருவாக்கப்படும் கரோனா தடுப்பு மருந்தை வருகின்ற சுதந்திர தினத்திற்குள் (ஆக.15) அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆா்) திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குநா் ஜெனரல் டாக்டா் பல்ராம் பாா்கவா கூறியுள்ளாா்.

விஸ்வரூபம் எடுத்துவரும் கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க இதற்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் ஹைதராபாத்தைச் சோ்ந்த பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்துடன் ஐசிஎம்ஆா், தேசிய தீநுண்மியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியது. இந்த தடுப்பு மருந்துக்கு ‘கோவேக்ஸின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஆராய்ந்த மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மனிதா்களுக்கான மருத்துவ சோதனைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாடு முழுக்க 12 மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மருத்துவ சோதனை தளமாக தோ்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த சோதனையை மேற்கொள்ளுகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்காணிப்பில் மனிதா்களுக்கான மருத்துவ சோதனை மேற்கொள்ளுவதை இந்த நிறுவனங்கள் தங்களை பதிவை ஜூலை 7 -ஆம் தேதிக்குள் உறுதிசெய்யுமாறு ஐசிஎம்ஆா் இயக்குநா் ஜெனரல் டாக்டா் பல்ராம் பாா்கவா இந்த ஆய்வில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் அவா்கூறியிருப்பதாவது:

அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்த பின் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த கோவேகஸின் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இலக்கை அடைய பாரத் பயோடெக் இந்திய நிறுவனம் விரைவாக செயல்படுகிறது என்று டாக்டா் பல்ராம் பாா்கவா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com