தூய்மையான காற்று: 2024-ஆம் ஆண்டு இலக்கை 74 நாள்களில் எட்டிய இந்தியா!

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 100 நாள்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் காற்றின் தரம் மிகச் சிறப்பான வகையில் முன்னேற்றம் கண்டுள்ளத
தூய்மையான காற்று: 2024-ஆம் ஆண்டு இலக்கை 74 நாள்களில் எட்டிய இந்தியா!

புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 100 நாள்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் காற்றின் தரம் மிகச் சிறப்பான வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டில் உள்ள 4 பெருநகரங்களில் 2024-ஆம் ஆண்டு தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் சுத்தமான காற்று என்ற இலக்கு வெறும் 74 நாள்களில் எட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், காற்றில் மாசை அதிகரிக்கும் எட்டு முக்கிய அம்சங்களில், நான்கு அம்சங்கள் முற்றிலும் குறைந்துவிட்டன என்றும், வாகனப் போக்குவரத்துக்குத் தடை, தொழிற்சாலைகள் இயங்காதது, கட்டுமானப் பணிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்றவை முற்றிலும் நின்று போனதால் காற்று மாசு மிக விரைவாக சீரடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காற்று மாசுபாட்டைக் கண்டறியும் மாநில காற்றுமாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com