இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,97,413-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,97,413-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ்க் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை சந்தைத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்துவிட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 425 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19,268-லிருந்து 19,69-ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,083-லிருந்து 4,24,433-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தொடா்ந்து 4ஆவது நாளாக இப்போது 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 

கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com