சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைப்பு: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும், சிபிஎஸ்இ பாடங்களை குறைப்பது குறித்து அனைத்து கல்வியாளர்களிடம் இருந்தும் பரிந்துரைகள் கேட்கப்பட்டன. அதன்படி, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவினை எடுப்பதற்காக உதவிய அனைத்து கல்வியாளர்களும் நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக கரோனா பரவல் அதிகரிப்பால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த கல்வியாண்டில் கூட  நடத்த முடியாத பொதுத் தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் எனும் சூழ்நிலையால் சிபிஎஸ்இ பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com