மத்​திய பிர​தேச பாசு​மதி அரி​சிக்கு புவி​சார் குறி​யீடு:  ​மத்​திய அர​சி​டம் முதல்​வர் வலி​யு​றுத்​தல்

மத்​திய பிர​தேச மாநி​லத்​தில் விளை​விக்​கப்​ப​டும் பாசு​மதி அரி​சிக்கு புவி​சார் குறி​யீடு வழங்க நட​வ​டிக்கை மேற்​கொள்​ளு​மாறு மத்​திய வேளாண் மற்​றும் விவ​சா​யி​கள் நலத் துறை அமைச்​சர் நரேந்​திர சிங்
மத்​திய பிர​தேச பாசு​மதி அரி​சிக்கு புவி​சார் குறி​யீடு:  ​மத்​திய அர​சி​டம் முதல்​வர் வலி​யு​றுத்​தல்



புது தில்லி: ​மத்​திய பிர​தேச மாநி​லத்​தில் விளை​விக்​கப்​ப​டும் பாசு​மதி அரி​சிக்கு புவி​சார் குறி​யீடு வழங்க நட​வ​டிக்கை மேற்​கொள்​ளு​மாறு மத்​திய வேளாண் மற்​றும் விவ​சா​யி​கள் நலத் துறை அமைச்​சர் நரேந்​திர சிங் தோமரை முதல்​வர் சிவ​ராஜ் சிங் சௌ​ஹான் திங்​கள்​கி​ழமை சந்​தித்து வலி​யு​றுத்​தி​னார்.

மத்​திய பிர​தேச மாநி​லத்​தில் உள்ள முரைனா, பிண்ட், குவா​லி​யர், ஷியோ​புர், ததியா, சிவ​புரி, குனா, விதிஷா, ராய்​சென், சீஹோர், ஹோஷங்​கா​பாத், ஜபல்​பூர், நர​சிங்​க​பூர் ஆகிய 13 மாவட்​டங்​க​ளில் சுமார் 80,000 விவ​சா​யி​கள் பாசு​மதி சாகு​படி செய்​கின்​ற​னர்.

வர​லாற்று ஆதா​ரங்​க​ளின்​படி மத்​திய பிர​தேச மாநி​லத்​தில் உற்​பத்தி செய்​யப்​ப​டும் பாசு​மதி அரி​சிக்​குப் புவி​சார் குறி​யீடு வழங்​கு​வது பொருத்​த​மாக இருக்​கும். அவ்​வாறு வழங்​கப்​பட்​டால் அது மாநில விவ​சா​யி​களை ஊக்​கப்​ப​டுத்​து​வ​தாக அமை​யும்.

மத்​திய பிர​தே​சத்​தில் உற்​பத்தி செய்​யப்​ப​டும் பாசு​மதி அரிசி பல்​வேறு நாடு​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​யப்​ப​டு​வ​தன் மூலம் ஆண்​டுக்கு ரூ.3,000 கோடி அந்​நிய செலா​வணி ஈட்டப்​ப​டு​கி​றது. புவி​சார் குறி​யீடு மறுக்​கப்​பட்​டால் அது மேற்​கண்ட 13 மாவட்ட விவ​சா​யி​க​ளின் வாழ்​வா​தா​ரத்தை அழித்து அவர்​க​ளுக்கு மிகப்​பெ​ரும் அநீதி இழைத்​த​தா​கி​வி​டும் என அமைச்​ச​ரு​ட​னான சந்​திப்​பின்​போது சௌ​ஹான் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தக் கோரிக்கை தொடர்​பாக மத்​திய அரசு தேவை​யான அனைத்து நட​வ​டிக்​கை​க​ளை​யும் மேற்​கொள்​ளும் என அமைச்​சர் தோமர், முதல்​வ​ரி​டம் உறுதி அளித்​துள்​ள​தாக மத்​திய பிர​தேச அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக குடி​ய​ர​சுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த், குடி​ய​ரசு துணைத் தலை​வர் வெங்​கய்ய நாயுடு ஆகி​யோ​ரை​யும் சிவ​ராஜ் சிங் சௌ​ஹான் சந்​தித்​தார்.

கடந்த மார்ச் மாதத்​தில் 4ஆவது முறை​யாக மத்​திய பிர​தேச முதல்​வ​ரா​கப் பொறுப்​பேற்ற பின்​னர், குடி​ய​ர​சுத் தலை​வர் மற்​றும் குடி​ய​ரசு துணைத் தலை​வரை சௌ​ஹான் சந்​திப்​பது இதுவே முதல் முறை.

குடி​ய​ர​சுத் தலை​வ​ரு​ட​னான சந்​திப்​பின்​போது, மாநி​லத்​தில் கரோனா தொற்று பாதிப்பு நில​வ​ரம், அண்டை மாநி​லங்​க​ளு​ட​னான பிரச்​னை​கள் குறித்து முதல்​வர் விளக்​கிக் கூறி​னார். குடி​ய​ரசு துணைத் தலை​வ​ரு​ட​னான சந்​திப்​பின்​போது, கோதுமை கொள்​மு​த​லில் மாநில அர​சின் சாதனை, புலம்​பெ​யர்ந்த தொழி​லா​ளர்​க​ளுக்​குத் தனது அரசு மேற்​கொண்​டுள்ள பல்​வேறு நலத் திட்டங்​கள் மற்​றும் கரோனா தடுப்பு நட​வ​டிக்​கை​கள் குறித்து சௌ​ஹான் எடுத்​து​ரைத்​தார்.

மத்​திய பிர​தேச மாநில அரசு சார்​பில் வெளி​யி​டப்​பட்​டுள்ள "உம்​மீத்' (எதிர்​பார்ப்பு), "மத்​திய பிர​தேஷ் விகாஸ் கே பி​ர​தி​பத் பிர​யாஸ்' (மத்​திய பிர​தேச வளர்ச்​சிக்​கான உறு​தி​யான முயற்சி) ஆகிய இரண்டு புத்​த​கங்​களை ராம்​நாத் கோவிந்த், வெங்​கய்ய நாயுடு ஆகி​யோ​ரி​டம் சௌ​ஹான் வ​ழங்​கி​னார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com