நீரவ் மோடியின் ரூ.329 கோடி சொத்துகள் பறிமுதல்

வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.329 மதிப்பிலான சொத்துகளை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
நீரவ் மோடியின் ரூ.329 கோடி சொத்துகள் பறிமுதல்

வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.329 மதிப்பிலான சொத்துகளை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த விசாரணை அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நீரவ் மோடிக்கு சொந்தமாக வோா்லி மும்பையின் சமுத்ர மஹால் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த 4 வீடுகள், கடலோரப் பகுதி பண்ணை வீடு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ஜெய்சால்மரில் உள்ள காற்றாலை, லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, பங்குகள் மற்றும் வங்கி வைப்புத் தொகை என மொத்தம் ரூ.329.66 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை யாவும் தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டம் 2018-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.2,348 கோடி மதிப்பிலான சொத்துகள் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீரவ் மோடி, அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகியோா் அங்கீகரிக்கப்படாத கடன் ஒப்புதல் கடிதம், வெளிநாட்டு கடன் கடிதம், உத்தரவாதக் கடிதங்களின் அடிப்படையில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் நீரவ் மோடி தலைமறைவு நிதி மோசடியாளராக கடந்த ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். தற்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com