ஜூன் இறுதியில் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே 70% கரோனா நோயாளிகள்

நாடு முழுவதும் கரோனா பரவி வந்தாலும், ஜூன் மாத இறுதியில் கரோனா பாதிப்பு வெறும் ஐந்து மாநிலங்களில்தான் கடுமையாக இருந்திருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
ஜூன் இறுதியில் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே 70% கரோனா நோயாளிகள்
ஜூன் இறுதியில் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே 70% கரோனா நோயாளிகள்

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பரவி வந்தாலும், ஜூன் மாத இறுதியில் கரோனா பாதிப்பு வெறும் ஐந்து மாநிலங்களில்தான் கடுமையாக இருந்திருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, ஐந்து மாநிலங்கள்.. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை, நாட்டில் கரோனா பாதித்த மொத்த  நோயாளிகளில் 63% ஆகும். அதே சமயம், ஜூலை இறுதியில் இந்த எண்ணிக்கை 70% உயர்ந்தது.

அதே சமயம், ஜூன் மாதத்தில் இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்க ஒன்று இரட்டிப்பாகியிருக்கிறது. இல்லை அதற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது.

உதாரணமாக தெலங்கானா, ஆந்திராவில் கரோனா பாதிப்பு ஜூன் மாத துவக்கத்தில் இருந்ததை விட, இறுதியில் ஏழு மடங்கு அதிகரித்தது. தமிழ்நாட்டில் அது 4 மடங்காக உயர்ந்தது. மாதத்தின் முதல் பாதியில் இருந்ததை விட, நாள்தோறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த பாதியில் மிக அதிகமாக உயர்ந்ததும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

தில்லியிலும், ஆந்திரத்திலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதால் இந்த உயர்வு ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவு இல்லை. ஆனால், ஜூன் 8 முதல் அதாவது முதல் நாட்டில் பரவலாக தளர்வு அறிவிக்கப்பட்ட போது, கரோனா பாதிப்பு அதிகரித்தது.

குறிப்பாக மகாராஷ்டிரத்தில் ஜூன் துவக்கத்தில் 70 ஆயிரமாக இருந்த கரோனா பாதிப்பு இறுதியில் 1 லட்சத்து 74 ஆயிரமாக ஆனது. ஜூன் மத்தியில் நாள்தோறும் கரோனா பாதிப்பு 3000 ஆக இருந்தது. அதுவே ஜூன் 27ல் 6 ஆயிரமாக இருந்தது.

தமிழகத்தில் என்று எடுத்துக் கொண்டால் தளர்வு அறிவிக்கப்பட்ட போது கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்த நிலையில், மாத இறுதியில் அது 39 ஆயிரமாக அதாவது 4 மடங்கு அதிகமாக இருந்தது. ஜூன் இறுதியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1000 ஐத் தொட்டது. ஜூன் மத்தியப் பகுதி வரை நாள்தோறும் 1000 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், அதுவே மாத இறுதியில் 3,500 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com