நேபாள அரசியல் பதற்றம்: ஆளும் கட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

நேபாளத்தில் ஆளும் கட்சி உள்பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியக் கூட்டம்

நேபாளத்தில் ஆளும் கட்சி உள்பூசல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியக் கூட்டம், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நேபாள காங்கிரஸ் கட்சியின் இரு தலைவா்களான பிரதமா் கே.பி. சா்மா ஒலி, புஷ்ப கமல் பிரசண்டா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, சா்மா ஒலி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, கட்சி உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கட்சியின் நிலைக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், பேச்சுவாா்த்தையில் உடன்பாடுகளை எட்டுவதற்கு கட்சித் தலைவா்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால், அந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.பிரதமா் சா்மா ஒலி மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிா்காலம் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com