கரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால் அச்சப்பட வேண்டாம்: நிபுணர்கள் தகவல்

கரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால் பயப்பட வேண்டாம், முகக்கவசம் அணியுங்கள் என்று நிபுணர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
கரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால் அச்சப்பட வேண்டாம்: நிபுணர்கள் தகவல்உடிச
கரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால் அச்சப்பட வேண்டாம்: நிபுணர்கள் தகவல்உடிச


ஹைதராபாத்: கரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால் பயப்பட வேண்டாம், முகக்கவசம் அணியுங்கள் என்று நிபுணர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.கரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதால் பயப்பட வேண்டாம், முகக்கவசம் அணியுங்கள் என்று நிபுணர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

கரோனா வைரஸ் காற்றின் மூலமாக அதிகமாகப் பரவும் என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அளித்திருக்கும் ஆய்வு முடிவில், காற்றில் கரோனா தொற்று சில நிமிடங்கள் இருக்கும், அது மிகத்தற்காலிகமாகவே இருக்கும், அதே சமயம், காற்றில் கரோனா தொற்றுப் பரவும் என்பதால், எல்லா இடங்களிலும் காற்றில் கரோனா தொற்று பறந்து கொண்டிருக்கும் என்பதாகாது, அவ்வாறு பறந்து வந்து அனைவரையும் தொற்றிக் கொள்ளும் என்பதும் அர்த்தமல்ல என்றும் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது, காற்றின் மூலமாகவும் கரோனா தொற்றுப் பரவும் என்பதால் முகக்கவசத்தை பொதுமக்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், ஒருவர் இருக்கும் இடமாக இருந்தாலும் அங்கு முகக்கவசத்தை அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம், கரோனா தொற்று காற்றின் மூலமும் பரவும் என்பதால் அச்சமோ, பயமோ கொள்ளக் கூடாது, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது மட்டுமே அவசியமாகிறது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, 

முப்பத்து இரண்டு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியிருக்கும் ஆய்வறிக்கையில், கரோன தொற்று காற்று மூலமாகவே பரவிவிடும் என்றும், ஒரு சிறு துகள் கூட கரோனா பரவக் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்திருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஐ.நா. சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா தொற்று பாதித்தவரின் இருமல் மற்றும் தும்மல் மூலமாகவோ கரோனா தொற்று பரவும் என்பது.

தி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெளியிடங்களுக்குச் செல்லாமல் பொது மக்கள் தங்களைத் தாங்களே பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா தொற்றானது அருகில் வாழும் கரோனா தொற்றாளடரிம் இருந்து, காற்று மூலமாகவே வீடுகளுக்குள்ளும் பரவும் என்கிறது.

32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் திறந்த கடிதத்தில், மிகச் சிறு துளி மூலம் கூட கரோனா பரவும். எனவே, சில பரிந்துரைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, கரோனா தொற்றாளர் இருமல் அல்லது தும்மும் போது நீர்திவளைகள் பட்டால்தான் கரோனா பரவும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது. இதை அடிப்படையாக வைத்தே முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அடிக்கடி கையை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், 5 மைக்ரான்களுக்கும் குறைவான ஒரு சிறு திவளை மூலமாகவும் கரோனா பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மூடப்பட்ட கதவுகளுக்குள் இருப்போரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும், மருத்துவப் பணியாளர்களுக்கு மிகச் சிறு திவளையையும் வடிகட்டும் வகையிலான என்95 முகக்கவசங்கள் வழங்கப்பட வண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com