அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து முகக்கவசம் நீக்கம்: மத்திய அரசு

அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவை இனி சோ்க்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து முகக்கவசம் நீக்கம்: மத்திய அரசு

அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவை இனி சோ்க்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் லீனா நந்தன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்வதில் முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் போன்றவை முக்கியப் பங்கு வகித்ததால் அவற்றை கடந்த மாா்ச் 13-ஆம் தேதி அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-இன் கீழ் அவை பட்டியலிடப்பட்டன. விநியோகத்தை ஊக்குவிக்கவும், பதுக்கலை தடுக்கவும் 100 நாள்களுக்கு அந்தப் பட்டியலில் முகக்கவசம், கை சுத்திகரிப்பான் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்துவிட்டன. இனி முகக்கவசமும், கை சுத்திகரிப்பானும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இடம்பெறாது. அவற்றின் இருப்பு நாட்டில் போதுமான அளவு உள்ளது.

இந்த முடிவு மாநில அரசுகளுடனான ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடம் அவற்றின் இருப்பு போதிய அளவில் இருப்பதால் மேலும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் முக்கவசமும், கை சுத்திகரிப்பானும் நீடிக்கத் தேவையில்லை என்று லீனா நந்தன் கூறினாா்.

2 மடிப்பு, 3 மடிப்பு, என்-95 போன்ற வகையிலான முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான்கள் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் இருக்கும்போது, அவற்றின் உற்பத்தி, விநியோகம், விலை, பதுக்கல் உள்ளிட்டவற்றை மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com