ஜூலை 15-இல் இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு

​இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு ஜூலை 15-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
​இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு ஜூலை 15-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (கோப்புப்படம்)
​இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு ஜூலை 15-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (கோப்புப்படம்)


இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு ஜூலை 15-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷெல் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டின்போது, பாதுகாப்பு, காலநிலை, வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேசம் மற்றும் பிராந்தியப் பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com