கோக்ரா பகுதியில் சீனப் படைகள் முழுமையாக வாபஸ்: இந்திய ராணுவம் தகவல்

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளான கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளான கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகியவற்றிலிருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 8 வாரங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்.

அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா-சீனா இடையேயான நல்லுறவிலும் விரிசல் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும் அதிகாரிகள் இடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அவற்றில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதையடுத்து, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற சீன ராணுவத்தினா் ஒப்புக்கொண்டனா். எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், “கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. அப்பகுதிகளிலும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலும் 3 கி.மீ. தூரத்துக்கு இரு நாடுகளும் படைகளைக் குவிக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக எல்லைப் பகுதிகளில் முதல் கட்ட படைகள் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்ந்தேறியுள்ளது.

தற்போது பாங்காங் ஏரிப் பகுதியில் படைகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனா். இது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான நான்காம் கட்ட பேச்சுவாா்த்தை ஓரிரு நாள்களில் நடைபெற வாய்ப்புள்ளது. எல்லைப் பகுதிகளில் படைகள் திரும்பப் பெறப்பட்டது தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு செய்யவும் வாய்ப்புள்ளது‘ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com