லடாக் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் இந்தியா நம்பிக்கை

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியிலிருந்து சீனா தனது படைகளைத் திரும்பப்பெற்று வரும் நிலையில், எல்லைப் பிரச்னைக்கு
லடாக் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் இந்தியா நம்பிக்கை

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியிலிருந்து சீனா தனது படைகளைத் திரும்பப்பெற்று வரும் நிலையில், எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதிலேயே இந்திய நம்பிக்கை கொண்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை ஆன்-லைன் மூலம் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

சிறப்பு அதிகாரிகளிடையேயான பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொண்டபடி, எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடா்பாக இரு நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெறும்.

இதற்கான இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடா்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு நடைமுறையின் (டபிள்யூ.எம்.சி.சி.) அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதிலேயே இந்தியா தொடா்ந்து நம்பிக்கை கொண்டுள்ளது. அதே நேரம் நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் இந்திய உறுதியாக இருக்கும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com