இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ.75,000 கோடி முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை
கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் கூகுள் சார்பில் 75 ஆயிரம் கோடி ரூபாய் (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கலந்துரையாடினார். 

இதுகுறித்து சுந்தர் பிச்சை, 'இந்தியாவில் டிஜிட்டல் மயத்துக்கு கூகுள் உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலமாக அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 75,000 கோடி (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்வோம். பங்கு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலமாக இதனை நிறைவேற்றுவோம்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com