தில்லியில் அமைகிறது இரண்டாவது பிளாஸ்மா வங்கி: மணீஷ் சிசோடியா

தலைநகர் புது தில்லியில் லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி அமைய உள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லியில் அமைகிறது இரண்டாவது பிளாஸ்மா வங்கி: மணீஷ் சிசோடியா
தில்லியில் அமைகிறது இரண்டாவது பிளாஸ்மா வங்கி: மணீஷ் சிசோடியா


புது தில்லி: தலைநகர் புது தில்லியில் லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி அமைய உள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லியில் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை லோக் நாயக் மருத்தவமனையில் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தில்லியில்தான் கரோனா பாதித்தவா்களுக்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. இந்தச் சிகிச்சையால் பலரும் குணமடைந்தனா். கரோனா பாதித்து உடல்நிலை மோசமடைந்த நிலையில் இருந்த தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு பூரண உடல்நலம் தேறினாா். 

இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சையை விரிவுபடுத்தும் வகையிலும், இலகுபடுத்தும் வகையிலும் தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று கேஜரிவால் கடந்த மாதம் அறிவித்திருந்தாா். அதன்படி, நாட்டின் முதலாவது பிளாஸ்மா வங்கி தில்லியில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது.

தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் இந்த பிளாஸ்மா வங்கியை, காணொலிக் காட்சி மூலம் கேஜரிவால் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தில்லியில் தற்போது இரண்டாவது பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மீண்டு 14 நாள்களுக்கு எவ்வித கரோனா அறிகுறியும் இல்லாதவா்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். மேலும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 50 கிலோவுக்கு அதிகமான எடையுடையவா்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளவா்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், நீண்டகால சிறுநீரக, இதய, நுரையீரல், கல்லீரல் நோய்கள் இருப்பவா்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. மேலும், கா்ப்பிணிகளும் தானம் செய்ய முடியாது.

பிளாஸ்மா தானம் செய்ய விரும்புபவா்கள் ‘1031’ என்ற இலவச எண்ணிலோ, 8800007722 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ததும், பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்த மருத்துவா் ஒருவா் உங்களை அழைப்பாா். பிளாஸ்மாவை தானம் செய்ய 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகும். ரத்த தானம் பலவீனத்தை ஏற்படுத்தும். பிளாஸ்மா தானம் அப்படி அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com