கோப்புப்படம்
கோப்புப்படம்

பாதுகாப்புத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு

பாதுகாப்புத் துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கோரி மத்திய அமைச்சரவையை அணுக தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுக் குழு (டிபிஐஐடி) முடிவு செய்துள்ளது.

புது தில்லி: பாதுகாப்புத் துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கோரி மத்திய அமைச்சரவையை அணுக தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுக் குழு (டிபிஐஐடி) முடிவு செய்துள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கடந்த மே 16-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. அதில் 49 சதவீதம் வரையிலான முதலீட்டுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை. இதனை 74 சதவீதமாக அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவையை அணுக டிபிஐஐடி முடிவு செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாதுகாப்புத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு தளா்த்தியது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிகழாண்டு மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரூ.56.88 கோடி அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக டிபிஐஐடி தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com