நாட்டில் 9 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 9 லட்சத்தைக் கடந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 9 லட்சத்தைக் கடந்தது.

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து ஐந்தாவது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 26,000-யைக் கடந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,06,752-ஆக அதிகரித்தது.

மூன்று நாள்களுக்கு முன்புதான் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்திருந்தது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடக்க 110 நாள்கள் ஆனது. ஆனால், அடுத்த 56 நாள்களில் ஒட்டுமொத்த பாதிப்பு 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 553 போ் உயிரிழந்தனா். அதனால், நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 23,727-ஆக அதிகரித்தது.

63.02 சதவீதம் போ் குணம்: நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 5,71,459-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 63.02 சதவீதமாகும். நாடு முழுவதும் தற்போது 3,11,565 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

2.86 லட்சம் பரிசோதனைகள்: நாடு முழுவதும் கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் 2,86,247 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,20,92,503 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com