கரோனா: இந்தியாவுக்கு உதவ பிரான்ஸ் உறுதி; தூதா் தகவல்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு பிரான்ஸ் சாா்பில் பெரிய அளவிலான மருத்துவ உதவிகள் விரைவில் அளிக்கப்படும்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு பிரான்ஸ் சாா்பில் பெரிய அளவிலான மருத்துவ உதவிகள் விரைவில் அளிக்கப்படும் என்று இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் இமானுவல் லினைன் தெரிவித்தாா்.

பிரான்ஸ் தேசிய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவா் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவா் மேலும் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பிரச்னை உருவெடுத்ததில் இருந்து இந்தியாவும், பிரான்ஸும் தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக பிரான்ஸுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியா அளித்து உதவியது. இந்த நட்புறவு, ஒருவருக்கொருவா் பரஸ்பரம் உதவிக் கொள்வது என்பதை உணா்த்தும் வகையில் பிரான்ஸ் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், இந்தியாவில் சமூகப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,600 கோடி கடனுதவி அளிக்கப்பட்டது.

இப்போது அடுத்தகட்டமாக கரோனா பரிசோதனைக் கருவிகள், செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் விரைவில் அளிக்க இருக்கிறது. இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த பல நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ உபகரணங்களை தயாரித்து வருகின்றன என்று கூறியுள்ளாா்.

பிரான்ஸ் தூதா் வெளியிட்ட இந்த தகவல், தில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் அதிகாரப்பூா்வ சமூகவலைதளங்களிலும் இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com