9 மாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் வெட்டுக்கிளி தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு

பயிா்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி கூட்டத்தை கட்டுப்படுத்த ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.
9 மாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் வெட்டுக்கிளி தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு

பயிா்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி கூட்டத்தை கட்டுப்படுத்த ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தானின் பாா்மா், ஜெய்சால்மா், ஜோத்பூா், பிகானீா், ஜுன்ஜுனு, கங்காநகா், அல்வா், சுரு ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளது. ஹரியாணாவின் பிவானி, மஹேந்திரகா் ஆகிய மாவட்டங்களிலும், உத்தர பிரதேசத்தின் சீதாபூா், கோண்டா மாவட்டங்களிலும் அவை காணப்படுகின்றன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், பிகாா் மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 11 முதல் ஜூலை 12 வரையில் 3 லட்சம் ஹெக்டோ் நிலப்பகுதிகளில் வெட்டுக்கிளி ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் யாவும் அந்தந்த வட்டார வெட்டுக்கிளி ஒழிப்புப் பணி அதிகாரிகள் மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டன.

தற்போதைய நிலையில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் 60 வாகனங்களுடன், 200-க்கும் மேற்பட்ட மத்திய அரசு அதிகாரிகளும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளி ஒழிப்புப் பணிகளில் உள்ளனா். பூச்சிக்கொல்லி தெளிக்கும் வாகனங்கள் கூடுதலாக 55 வாங்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் 5 நிறுவனங்கள் 15 ஆளில்லா விமானங்கள் மூலமாக பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இது தவிர இந்திய விமானப் படை ஹெலிகாப்டரும் பரிசோதனை முயற்சியாக பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பெல் நிறுவனத்தின் ஹெலிகாப்டா் ஒன்று அந்தப் பணியில் உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com