மௌனம் கலைத்தார் பைலட்: உண்மையைத் தோற்கடிக்க முடியாது என ட்வீட்

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உண்மையைத் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உண்மையைத் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.  (கோப்புப்படம்)

ராஜஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து மாநிலத் துணை முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மௌனம் கலைத்த சச்சின் பைலட், சுட்டுரைப் பக்கத்தில் ஹிந்தி மொழியில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "உண்மைக்கு இடையூறு ஏற்படுத்தலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சச்சின் பைலட் நீக்கம் குறித்து முதல்வர் அசோக் கெலாட் தெரிவிக்கையில், "பைலட் கையில் எதுவும் இல்லை, அனைத்தும் பாஜகவின் ஏற்பாடு" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com