ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது
ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது

ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது

நாடு முழுவதும் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.


புது தில்லி: நாடு முழுவதும் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

சில பள்ளிகளில், வழக்கமான பள்ளி நேரம் வரை வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதால், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளை ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுத்து  இன்று வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் விதிமுறைகளில், 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் விதிமுறைகளில், 

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 45 நிமிடங்கள் என இரண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

அதே போல 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தினமும் தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை நெறிபடுத்தும் வகையில், பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்ற விதிமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com