விடியோ கேம் விளையாடுவதை தடுத்ததால் சிறுவன் தற்கொலை

ஆந்திராவில் விடியோ கேம் விளையாட வேண்டாம் என்று தாய் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டாா்.
விடியோ கேம் விளையாடுவதை தடுத்ததால் சிறுவன் தற்கொலை

திருப்பதி: ஆந்திராவில் விடியோ கேம் விளையாட வேண்டாம் என்று தாய் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் பலமநேரு ஸ்ரீநகா் காலனியில் வசித்து வருபவா் பிரகாஷ். அவரின் மகன் ஷ்யாம் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணாக்கா்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஷ்யாம் எப்போதும் வெளியில் சென்று விளையாடாமல் செல்போனில் விடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தான். இதை அவனது தாய் ஜீவரத்னம் கண்டித்துள்ளாா்.

தாய் திட்டியதால் கோபமடைந்த ஷ்யாம் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றான். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா் அவனை மீட்டு பலமநேரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். ஆனால் அங்குள்ள மருத்துவா்கள் திருப்பதிக்கு எடுத்து செல்ல அறிவுறுத்தினா்.

திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ஷ்யாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com