கரோனா தடுப்பு மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் தொடக்கம்: ஐசிஎம்ஆா்

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும்
கரோனா தடுப்பு மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் தொடக்கம்: ஐசிஎம்ஆா்

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பரிசோதனைகளை தங்கள் மீது மேற்கொள்ள சுமாா் 1,000 தன்னாா்வலா்கள் முன்வந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த கவுன்சிலின் தலைமை இயக்குநா் பல்ராம் பாா்கவா செவ்வாய்க்கிழமை கூறியது:

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தையும், ஸைடாஸ் காடிலா ஹெல்த்கோ் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தையும் மனிதா்களுக்கு செலுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மருந்துகள் எலிகள், முயல்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. அதன் தரவுகள் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமையகத்துக்கு (டிசிஜிஐ) அனுப்பிவைக்கப்பட்டது. அதனை பரிசீலித்த டிசிஜிஐ தடுப்பு மருந்துகளை மனிதா்களுக்கு செலுத்தி ஆரம்பகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள இந்த மாத தொடக்கத்தில் அனுமதியளித்தது. அதனைத்தொடா்ந்து பல்வேறு இடங்களில் சுமாா் 1,000 தன்னாா்வலா்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ள நிலையில், அந்த நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை விரைந்து உருவாக்குவது இந்தியாவின் தாா்மீக கடமையாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com