தாயின் சிகிச்சைக்காக நன்கொடை கிடைக்க உதவியவர்களால் உபத்திரவம்: கேரள பெண் புகார்

தாய்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நன்கொடை கேட்டது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதன் மூலம் ரூ.85 லட்சம் அளவுக்கு நிதி திரட்டிய கேரளப் பெண்
தாயின் சிகிச்சைக்காக நன்கொடை கிடைக்க உதவியவர்களால் உபத்திரவம்: கேரள பெண் புகார்
தாயின் சிகிச்சைக்காக நன்கொடை கிடைக்க உதவியவர்களால் உபத்திரவம்: கேரள பெண் புகார்


தாய்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நன்கொடை கேட்டது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதன் மூலம் ரூ.85 லட்சம் அளவுக்கு நிதி திரட்டிய கேரளப் பெண், தனக்கு உதவியவர்களே தன்னை துன்புறுத்துவதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் வர்ஷா. இவர் கடந்த ஜூன் 24-ம் தேதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் தேவைப்படுவதாகவும் அதற்கு நிதியுதவி செய்யுமாறு சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இவர் கோரிக்கை விடுத்து வெறும் 24 மணி நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.85 லட்சம் அளவுக்கு பணம் வந்து குவிந்தது. உடனடியாக அவர் தனக்கு உதவி செய்வதை நிறுத்துங்கள் என்றும், தேவையானதை விட அதிகமான பணம் கிடைத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதே சமூக வலைத்தளத்தில் வர்ஷா ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், தனது கோரிக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாக உதவிய சமூக ஆர்வலர்கள் சிலர், அறுவை சிகிச்சைக்குப் போக மிச்சத் தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தி துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சஜன் தனது வங்கி கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை தனக்கு வழங்க வேண்டும் என்று துன்புறுத்துவதாகவும், ஆனால் அதனை தான் மறுத்துவிட்டதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தாய்க்கு கல்லீரலை தானம் அளித்திருக்கும் தானும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாயும், மருத்துவமனைக்கு அருகிலேயே ஓய்வு எடுத்து வருகிறோம். தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறோம். ஆனால், எங்களுக்குக் கிடைத்த நிதியுதவியில் மிச்சப் பணத்தைக் கொடுக்குமாறு எனக்கு உதவியவர்களே தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து கொச்சி நகர காவல்துறை உதவி ஆணையர் கூறுகையில், சமூக ஆர்வலர் சஜன் கெச்சேரி உள்பட நான்கு பேர் மீது வர்ஷாவிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. விசாரணை நடத்திய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com