2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தில்லியில் இருந்தபடி காணொலி மூலம் உரையாற்றினார். அதில், உலக நாடுகளை கரோனா வைரஸ் தொற்று சோதித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் யுத்தமாக இந்தியாவில் மாற்றி உள்ளோம். 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இந்தியா செல்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. தூய்மை பணிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 50 கோடி இந்தியர்களை உள்ளடக்கி மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது. 

உலகில் ஆறில் ஒருவர் வாழும் இடமாக இந்தியா திகழ்கிறது. கரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையில் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. உலகிலேயே கரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com