திருப்பதியில் பக்தர்கள் அனுதிக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் அனுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் அனுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த ஜூன் 11-ம் தேதி பக்தர்கள் அனுமதிக்காக திறக்கப்பட்டது.

இந்த நிலையில், திருமலை கோயில் ஊழியர்கள், அர்ச்சர்கள் உள்பட பலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்குமாறு அர்ச்சகர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து கோயில் நிர்வாகி சுப்பாரெட்டி கூறுகையில், ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்க அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வசிக்கும் பகுதியில் இருந்துதான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, பக்தர்களால் ஏற்படவில்லை. 

கரோனா பாதித்த ஊழியர்கள் அனைவருக்கும் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்கள். மூத்த அர்ச்சகர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தப்படவில்லை. விருப்பம் உள்ளவர்கள் தாமாகவே வருகிறார்கள்.

அரசின் அறிவிப்புப்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முறையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே தற்போதைய நடைமுறைப்படி திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான தரிசனம் தொடரும், தடை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com