உத்தரப்பிரதேசத்தில் ஊழல் உச்சம் : பாஜக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் ஊழல் உச்சமடைந்திருப்பதாக பாஜக எம்.எல்.ஏ குற்றம் சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
corruption rampant in up says bjp mla
corruption rampant in up says bjp mla

உத்தரப்பிரதேசத்தில் ஊழல் உச்சமடைந்திருப்பதாக பாஜக எம்.எல்.ஏ குற்றம் சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபாமாவ் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த ஷ்யாம் பிரகாஷ். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வரும் அரசு மீது, சொந்த கட்சி எம்.எல்.ஏ ஊழல் புகார் தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”எனது இவ்வளவு நாள் அரசியல் வாழ்வில் இப்படி ஒரு ஊழலை நான் பார்த்ததில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ,”உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் ஊழல் குறித்து உயர் அதிகாரிகளிடம் யார் புகார் செய்தாலும், மற்றவர் அதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.” என குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.எல்.ஏ ஷ்யாம் பிரகாஷின் இந்த குற்றச்சாட்டு பாஜக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ பிரகாஷ்,முதல்வர் யோகி அரசின் மீது சட்டமன்ற நிதி கையாடல் குறித்து புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com