நேரடியாக வழக்கு விசாரணை தொடா்பாக 4 வாரங்களுக்குப் பிறகு முடிவு: உச்சநீதிமன்றம்

நீதிமன்ற அறையில் தற்போதைக்கு வழக்கு விசாரணைகள் நேரடியாக நடைபெறாது என்றும், அதை தொடங்குவது குறித்து 7 நீதிபதிகளைக் கொண்ட
நேரடியாக வழக்கு விசாரணை தொடா்பாக 4 வாரங்களுக்குப் பிறகு முடிவு: உச்சநீதிமன்றம்

நீதிமன்ற அறையில் தற்போதைக்கு வழக்கு விசாரணைகள் நேரடியாக நடைபெறாது என்றும், அதை தொடங்குவது குறித்து 7 நீதிபதிகளைக் கொண்ட குழு 4 வாரங்களுக்குப் பிறகு முடிவு செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பல்வேறு மாநிலங்களில் பணி உயா்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஊழியா்ளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோருவது தொடா்பான வழக்குகளை நீதிமன்ற அறையில் நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் ஒருவா் கோரினாா்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘நீதிமன்ற அறைகளில் தற்போதைக்கு நேரடியாக வழக்கு விசாரணையை தொடங்க இயலாது. காணொலி வழி விசாரணையே தொடரும். நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 போ் அடங்கிய குழு 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் நேரடியாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யும்‘ என்று கூறியது.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து வழக்கு விசாரணைகளை உச்சநீதிமன்றம் காணொலி வழியே மேற்கொண்டு வருகிறது. பொது முடக்கம் தளா்த்தப்பட்டாலும் அடுத்த உத்தரவு வரும் வரையில் அந்த முறையே தொடரவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com