வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி

​வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருவதாக இந்தியா புத்தாக்க யோசனைகள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
​வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருவதாக இந்தியா புத்தாக்க யோசனைகள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
​வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருவதாக இந்தியா புத்தாக்க யோசனைகள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருவதாக இந்தியா புத்தாக்க யோசனைகள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-இந்தியா தொழிலமைப்பு கவுன்சில் சார்பில் இந்தியா புத்தாக்க யோசனைகள் உச்சி மாநாடு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. நடப்பாண்டு மாநாட்டுக்கான மையக் கருத்தாக ‘சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த மையக் கருத்தின் அடிப்படையில் இந்தியா, அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் உரையாற்றினர். 

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றியதாவது:

"உலகுக்கு சிறந்த எதிர்காலத்துக்கான தேவை இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அந்த எதிர்காலத்துக்கு நாம் அனைவரும்தான் கூட்டாக வடிவம் தர வேண்டும்.  எதிர்காலத்தை மனிதர்களை மையமாகக் கொண்டு அணுகுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் வளமான உலகை நோக்கியப் பயணத்துக்கு இந்தியா பங்களித்து வருகிறது. 

வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருகிறது. தொழில்நுட்பத் துறை பற்றி ஒரு உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில், இந்தியாவில் சுவாரஸ்யமான ஆய்வு முடிவு ஒன்று வெளியானது. முதன்முறையாக, நகர்ப்புற இணையதளப் பயனாளர்களைக் காட்டிலும், கிராமப்புற இணையதளப் பயனாளர்கள் அதிகம் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. 

சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய இந்தியா உங்களை அழைக்கிறது. இந்தியாவில் சுகாதாரத் துறை ஆண்டுதோறும் 22 சதவிகிதத்தைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. எங்களது நிறுவனங்களும் மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் மேம்பட்டு வருகிறது. 

மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும் மற்றொரு துறை, விமானப் போக்குவரத்துத் துறை. அடுத்த 8 ஆண்டுகளுக்குள் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி தனியார் விமான நிறுவனங்கள், அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் புதிய விமானங்களை இணைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

பாதுகாப்புத் துறை மற்றும் மற்றும் விண்வெளித் துறையில் முதலீடு செய்ய இந்தியா உங்களை அழைக்கிறது. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவிகிதமாக உயர்த்துகிறோம். பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்க இந்தியாவில் 2 பாதுகாப்புத் தளவாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்ய இந்தியா உங்களை அழைக்கிறது. காப்பீட்டுத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவிகிதமாக இந்தியா உயர்த்தியுள்ளது. 

அந்நிய நேரடி முதலீட்டில் ஆண்டுதோறும் இந்தியா புதிய சாதனையைப் படைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் கூடுதலாக உள்ளது." என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com