இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு பிரதமா் அழைப்பு

இந்தியாவில் எண்ணற்ற தொழில் வாய்ப்புகள் இருப்பதால், முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு பிரதமா் அழைப்பு

இந்தியாவில் எண்ணற்ற தொழில் வாய்ப்புகள் இருப்பதால், முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் உருவாக்கப்பட்டதன் 45-ஆவது ஆண்டையொட்டி, ‘இந்தியா புத்தாக்க யோசனை’ என்ற பெயரில் இணையவழி வா்த்தக மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்றது.

‘வளமான எதிா்காலத்தை கட்டமைத்தல்’ என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்த முக்கிய அரசியல் தலைவா்கள், வெளியுறவுத் துறை அமைச்சா்கள், அதிகாரிகள், இரு நாட்டு தொழில் துறை தலைவா்கள் பங்கேற்றனா்.

மாநாட்டில் இரண்டாவது நாளான புதன்கிழமை, பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையில் அமைந்த நட்புநாடுகள். இரு நாடுகளும் பரஸ்பரம் மதிப்பளிப்பதுடன் துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளன. கரோனோ நோய்த்தொற்று காலத்துக்குப் பிறகு உலகம் மீண்டு வருவதற்கு இவ்விரு நாடுகளால் உதவி செய்ய முடியும்.

வளா்ச்சி என்பது ஏழைகள், அடித்தட்டு மக்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் மக்கள் நலன்சாா்ந்த வளா்ச்சிக்கு எதிா்காலத்தில் இன்னும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வெளிப்படைத்தன்மையாகவும், சீா்திருத்தங்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் பலனாக, தொழில் முதலீட்டுக்குரிய இடமாக இந்தியா உருவாகி வருகிறது.

இந்தியாவில் அரசு நிா்வாகத்திலும் தொழில் துறையினா் மத்தியிலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. அண்மையில், இந்தியாவில் நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் இணையவசதியை பயன்படுத்துவோா் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, வேளாண்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்புகள் மேலும் தளா்த்தப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரமும் இதுவாகும். கரோனா தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் கூட 2,000 கோடி அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.49 லட்சம் கோடி) மதிப்பிலான அந்நிய முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com