கக்கநாடு: கருணாலயா கன்னியாஸ்திரிகள் 30 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரள மாநிலம் கக்கநாடு பகுதியில் உள்ள கருணாலயாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கக்கநாடு: கருணாலயா கன்னியாஸ்திரிகள் 30 பேருக்கு கரோனா பாதிப்பு
கக்கநாடு: கருணாலயா கன்னியாஸ்திரிகள் 30 பேருக்கு கரோனா பாதிப்பு

கொச்சி: கேரள மாநிலம் கக்கநாடு பகுதியில் உள்ள கருணாலயாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருணாலயா வளாகத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு தளத்தை கரோனா சிறப்பு வார்டாக மாற்றி, அங்கேயே 30 கன்னியாஸ்திரிகளும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே கான்வென்டில் சில நாள்களுக்கு முன்பு  கரோனாவுக்கு பலியான கன்னியாஸ்திரி கிளெராவுடன் இந்த 30 கன்னியாஸ்திரிகளும் தொடர்பில் இருந்துள்ளனர்.

ஏற்கனவே 3 கன்னியாஸ்திரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்த பாதிப்பு 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த மையத்தில் தற்போது மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com