அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கரோனா நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்து  பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கரோனா நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்து  பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்தடுத்த தற்கொலைகள்: பெண் நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்த மருத்துவமனை!

அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கரோனா நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்து  பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு: அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கரோனா நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதித்து  பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் கே.சி பொது மருத்துவமனையில் சமீபத்தில் அடுத்தடுத்து இரு பெண் கரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டனர். இருவருமே நள்ளிரவில் கழிப்பறை சென்று அங்கேயே தங்களது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து பெண் கரோனா நோயாளிகள் சேலை, துப்பட்டா உள்ளிட்ட உடைகள் அணியத் தடை விதித்து  பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதுதொடர்பாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரையா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இரு பெண்கள் அடுத்தடுத்து தாங்கள் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்தே உடை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பெண் நோயாளிகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் வழங்கப்படும் கவுன் போன்ற உடையை அணிந்து கொள்ள வேண்டும். இதற்கு சில வயதான பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் நாங்கள் அதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அதேநேரம் நோயாளிகளின் அருகே இருபக்கமும் உள்ள படுக்கைகளில் உள்ள மற்ற நோயாளிகளை அவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். குறிப்பாக அவர்கள் கழிப்பறை செல்லும்போது கூடவே சென்று உதவி, அவர்கள் பத்திரமாக வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களுக்கு இரவில் சிறிய அளவில் தூக்க மருந்து தருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.

அவர்களது மனநலனை நல்ல முறையில் வைத்திருக்க வார்டுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள்  நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்சிகள், தியானம் குறித்த பயிற்சிகள், படங்கள் மற்றும் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து மருத்துவமனை மனநல மருத்துவரும் அவர்களைத் தொடர்ந்து  கண்காணித்து வருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com