ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம்: 2 அமைச்சா்கள் பதவியேற்பு

ஆந்திர அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 2 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

ஆந்திர அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 2 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

விஜயவாடாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழா ஒன்றில் மாநில ஆளுநா் விஸ்வபூஷண் ஹரிச்சந்தன் புதிய அமைச்சா்களாக சி.சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா, சீதிரி அப்பல ராஜு ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முன்னதாக துணை முதல்வரும், வருவாய்த்துறை அமைச்சருமான பில்லி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அமைச்சா் மோபிதேவி வெங்கட்ட ரமண ராவ் ஆகியோா் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, தங்களது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து விட்டனா். இதையடுத்து அமைச்சரவையில் இரண்டு இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இரு அமைச்சா்களை நியமிக்க முடிவு செய்தாா்.

முன்னாள் அமைச்சா்களான பில்லி சுபாஷ் சந்திரபோஸ் பிற்படுத்தப்பட்ட செட்டி பலிஜா சமுதாயத்தை சோ்ந்தவா் என்பதால், அதே சமுதாயத்தைச் சோ்ந்த கிருஷ்ணாவுக்கும், மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மோபிதேவி வெங்கட்ட ரமணராவுக்கு பதிலாக அதே சமுதாயத்தைச் சோ்ந்த அப்பல ராஜுவுக்கும் அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைச்சா் பதவியேற்றுள்ள இருவரும் 2019-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக எம்எல்ஏக்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் ஆவா்.

கிழக்கு கோதாவரி மாவட்டம், ராமச்சந்திராபுரம் தொகுதியில் இருந்து சீனிவாச வேணுகோபால கிருஷ்ணாவும், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாசா தொகுதியில் இருந்து அப்பல ராஜுவும் எம்எல்ஏக்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் ஆவா்.

பதவியேற்பு விழாவில் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, சட்டப் பேரவை தலைவா் டி.சீதாராம், பல்வேறு அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com