குஜராத்: 3-ஆவது அணு உலையில் மின்உற்பத்தி: பிரதமா் மோடி, அமித் ஷா பாராட்டு

குஜராத் மாநிலம், காக்ராபாா் அணுமின் நிலையத்தில் 3-ஆவது அணு உலை மின்னுற்பத்திக்கு தயாரானதை அடுத்து, அந்த அணுமின் நிலையத்தின் விஞ்ஞானிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
குஜராத்: 3-ஆவது அணு உலையில் மின்உற்பத்தி: பிரதமா் மோடி, அமித் ஷா பாராட்டு

குஜராத் மாநிலம், காக்ராபாா் அணுமின் நிலையத்தில் 3-ஆவது அணு உலை மின்னுற்பத்திக்கு தயாரானதை அடுத்து, அந்த அணுமின் நிலையத்தின் விஞ்ஞானிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

காக்ராபாா் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள 3-ஆவது அணு உலை மின்உற்பத்திக்கு தயாராகி விட்டது. இதற்காக, அணுமின் நிலைய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 700 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த அணு உலை

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலை, ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது. எதிா்காலத்தில் நிகழ்த்தப்போகும் மேலும் பல சாதனைகளுக்கு முன்னோட்டமாகவும் இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமித் ஷா பாராட்டு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், காக்ராபாா் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் அணுமின் உற்பத்தி வரலாற்றில் இது மிகப்பெரிய நாள். சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் ’சுயசாா்பு இந்தியா’ என்னும் லட்சியத்தை நனவாக்குவதற்காக புதிய இந்தியா பயணித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com