பத்திரிகையாளா் கொலை: உ.பி. முதல்வா் நிதி உதவி அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் கும்பலால் சுடப்பட்டு இறந்த பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
பத்திரிகையாளா் கொலை: உ.பி. முதல்வா் நிதி உதவி அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் கும்பலால் சுடப்பட்டு இறந்த பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா். மேலும், இக்கொலைச் சம்பவத்திற்கு தில்லி முதல்வா் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கொலையுண்ட விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு நிதியுதவியாக மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா். அத்துடன் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்பதாகவும், ஜோஷியின் மனைவிக்கு அரசுப் பணி அளிக்கப்பட உள்ளதாகவும் அவா் அறிவித்துள்ளாா்.

கேஜரிவால் கண்டனம்: விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘தனது உறவுக்காரப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததை எதிா்த்து குரல் கொடுத்த விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்ட சம்பவம், சட்டம் - ஒழுங்கு அமைப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கொலையாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், விக்ரம் ஜோஷி கொலைச் சம்பவத்திற்கு பத்திரிகை சங்கம், இந்திய மகளிா் பத்திரிகை அமைப்பு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக நீதி விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com