மும்பையில் கரோனா பரிசோதனை ஹெல்மெட் அறிமுகம்

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் கரோனா பரிசோதனையை விரைவாக  மேற்கொள்ள அதிநவீன ஹெல்மெட் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கரோனா பரிசோதனை ஹெல்மெட் அறிமுகம்
மும்பையில் கரோனா பரிசோதனை ஹெல்மெட் அறிமுகம்

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் கரோனா பரிசோதனையை விரைவாக  மேற்கொள்ள அதிநவீன ஹெல்மெட் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் திண்டாடி வரும் பல்வேறு மாநிலங்கள் வைரஸ் பாதிப்பை தடுக்க பொது ஊரடங்கு, பரிசோதனைகள் அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் கரோனா பாதிப்பில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிரம் மாநிலம் மும்பை பகுதியில் விரைவான பரிசோதனையை செய்ய அதிநவீன ஹெல்மெட் கருவி அறிமுகப்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனத்தின் ஹெல்மெட் வடிவில் இருக்கும் இந்த கருவி மூலம் பொதுமக்களை விரைவான கரோனா பரிசோதனையில் ஈடுபடுத்த முடியும்.

இந்த ஹெல்மெட் மும்பை மற்றும் அருகிலுள்ள புனே நகரில் உள்ள அதிகாரிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமான பரிசோதனை முறை மூலம் மூன்று மணி நேரத்தில் 300 பேர் வரை மட்டுமே பரிசோதிக்க முடியும். துபாய், இத்தாலி மற்றும் சீனாவில் முன்பு பயன்படுத்திய இந்த துரித பரிசோதனை கருவி மூலம் இரண்டரை மணி நேரத்தில் 6000 பேரை கண்காணிக்க முடியும்.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் தற்போது 3 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com