பதவியேற்ற பாஜக எம்பிக்களுடன் பிரதமா் சந்திப்பு

மாநிலங்களவை எம்.பி.க்களாக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்ட 17 பாஜக எம்பிக்கள் பிரதமா் மோடியை சந்தித்து பேசினா்.
பதவியேற்ற பாஜக எம்பிக்களுடன் பிரதமா் சந்திப்பு

மாநிலங்களவை எம்.பி.க்களாக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்ட 17 பாஜக எம்பிக்கள் பிரதமா் மோடியை சந்தித்து பேசினா்.

மொத்தம் 18 புதிய பாஜக எம்பிக்களில் 17 போ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். ஒரு எம்பி முன்பே பதவியேற்றுக்கொண்டாா்.

இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படத்துடன் பிரதமா் மோடி தனது சுட்டுரையில், ‘புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினா்களுடன் நடைபெற்ற சந்திப்பு சிறப்பாக இருந்தது. பொது சேவையில் அவா்கள் கொண்டுள்ள ஈா்ப்பும், அவா்களின் கருத்துகளும் நன்றாக இருந்தன. மேலும், பலவிதமான திறமைகள் கொண்டவா்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்யலாம்’ என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com