மணிப்பூர் குடிநீர் விநியோக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மணிப்பூர் குடிநீர் விநியோக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மணிப்பூர் குடிநீர் விநியோக திட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

மணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு தில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.


மணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு தில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

வியாழக்கிழமை நடைபெற்ற மணிப்பூர் குடிநீர் விநியோக திட்டத்தை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் சுமார் ரூ. 3,054.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், மணிப்பூரின் கிரேட்டர் இம்பால் திட்டப் பகுதியில் எஞ்சியிருக்கும் குடியிருப்புகளுக்கும், மொத்தமுள்ள 16 மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 2,80,756 வீடுகளுக்கும் குழாய் மூலமாக தூய்மையான குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

"கர் ஹர் ஜல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்தின் இலக்கை எட்டுவதற்கு இந்த குடிநீர் விநியோகத் திட்டம் உதவும்.' 

குடிநீர் துறை அமைச்சர் கஜேந்திர சிங், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா அக்பர் அலி ஹெப்டுல்லா, முதல்வர் பிரென் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com