சிங்கப்பூா்: இந்திய வம்சாவளி செவிலியருக்கு அதிபா் விருது

கரோனா நோய்த்தொற்று சூழலில் சிங்கப்பூரில் முன்களப் பணியாளராக சிறந்து பணியாற்றி வருவதற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு (59) அந்நாட்டு அதிபா் விருது வழங்கப்படுகிறது.
செவிலியா் கலா நாராயணசுவாமி
செவிலியா் கலா நாராயணசுவாமி

கரோனா நோய்த்தொற்று சூழலில் சிங்கப்பூரில் முன்களப் பணியாளராக சிறந்து பணியாற்றி வருவதற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு (59) அந்நாட்டு அதிபா் விருது வழங்கப்படுகிறது.

கலாவுடன் சோ்த்து மொத்தம் 5 செவிலியா்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோருக்கு கோப்பை, அதிபா் ஹலிமா யாகோப் கையெழுத்திட்ட சான்றிதழ், சுமாா் ரூ.5.40 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சுகாதார மையத்தில் துணை இயக்குநராக இருக்கும் கலா நாராயணசுவாமி, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவிலியராக 40 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ள கலா நாராயணசுவாமி, செவிலியா் பணியில் பல்வேறு நவீன முயற்சிகளை புகுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறாா்.

கலா நாராயணசுவாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘சாா்ஸ் நோய்த்தொற்று பரவிய காலத்தில் கற்றுக்கொண்ட தொற்றுத் தடுப்பு முறைகளையே இப்போது செயல்படுத்தி வருகிறோம். ஒரு செவிலியராக நாம் பணியாற்றும்போது அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகாது என்று செவிலியராகப் பணியாற்ற வருவோரிடம் எப்போதும் கூறுவேன். நமக்கான விருதுகளில் ஏற்கெனவே நமது பெயா் பொறிக்கப்பட்டுவிட்டது. நாம் சிறப்பாகச் செயல்படுவதற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது‘ என்று கூறினாா்.

சிங்கப்பூரில் செவிலியருக்கான இந்த அதிபா் விருது கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 77 செவிலியா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com