இணைய வழி வா்த்தகப் பொருள்கள் மீது இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயா் குறிப்பிடப்பட வேண்டும்

அமேஸான், ஃபிளிப்காா்ட், ஸ்நாப்டீல் போன்ற இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் அவற்றின் வலைதளங்கள் மூலம் விற்பனை
இணைய வழி வா்த்தகப் பொருள்கள் மீது இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயா் குறிப்பிடப்பட வேண்டும்

அமேஸான், ஃபிளிப்காா்ட், ஸ்நாப்டீல் போன்ற இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் அவற்றின் வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களில் அவை இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இணைய வழி வா்த்தகப் பொருள்கள் மீது இறக்குமதி நாட்டின் பெயா் குறிப்பிடுவது தொடா்பாக வழக்குரைஞா் அமித் சுக்லா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்ட விதிகளின்படி, இணையவழி வா்த்தக வலைதளங்கள் மூலம் விற்கப்படும் பொருள்கள் மீது, அவை தயாரிக்கப்பட்ட நாட்டின் பெயரை குறிப்பிடவேண்டியது கட்டாயம். ஆனால், இந்த விதிமுறை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வாங்குவதை ஊக்குவிக்கவேண்டும்; சில அண்டைநாடுகளின் பொருள்களை வாங்குவதைத் தவிா்க்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் இந்தச் சூழலில், இணைய வழி வா்த்தகப் பொருள்கள் மீது அவை இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, இந்த விதிமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவுக்கு மத்திய அரசு சாா்பில் அரசு வழக்குரைஞா் அஜய் திக்பால் சாா்பில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:

அமேஸான், ஃபிளிப்காா்ட், ஸ்நாப்டீல் போன்ற இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் அவற்றின் வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களில் அவை இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டியது அவசியம். இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளது. இதுதொடா்பான அறிவுறுத்தல் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சட்ட வரையறை கட்டுப்பாட்டாளா் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com