கிழக்கு லடாக்கில் படைகளை குவித்ததன் மூலம் எதிரிகளுக்கு வலுவான செய்தியை தெரிவித்துள்ளோம்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக்கில் படைகளை குவித்ததன் மூலம் எதிரிகளுக்கு வலுவான செய்தியை தெரிவித்துள்ளோம்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக் பகுதியில் அதிரடியாக படைகளைக் குவித்திருப்பதன் மூலம் எதிரிகளுக்கு வலுவான செய்தியைத் தெரிவித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக் பகுதியில் அதிரடியாக படைகளைக் குவித்திருப்பதன் மூலம் எதிரிகளுக்கு வலுவான செய்தியைத் தெரிவித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இந்திய விமானப்படை உயா் கமாண்டா்களின் 3 நாள் கருத்தரங்கு தில்லியில் புதன்கிழமை தொடங்கியது. விமானப்படைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா, பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ள இந்த கருத்தரங்கை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாட்டு மக்கள் நமது பாதுகாப்புப் படையின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனா். கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் விமானப்படை நடத்திய துல்லியத் தாக்குதல் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதேபோச கடந்த சில மாதங்களாக விமானப் படையின் செயலாற்றும் விதம் மேம்பட்டிருப்பதும் பாராட்டும் விதமாக உள்ளது.

பாலகோட் தாக்குதலும், கிழக்கு லடாக் பகுதியில் அதிரடியாக படைகளைக் குவித்திருப்பதும் நமது எதிரிகளுக்கு வலுவான செய்தியைத் தெரிவித்துள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம், விமானப் படையினா் எந்தவித சவாலையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நானோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களிலும், சைபா் தளங்களிலும் மாறி வரும் புதிய தொழில் நுட்பங்களை உடனுக்குடன் பெறும் வகையில் விமானப் படை செயல்பட வேண்டும். ஆயுதப் படையினரின் நிதி உள்ளிட்ட அனைத்து வகையான தேவைகளையும் அமைச்சகம் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கும் என்றாா் அவா்.

இந்த கருத்தரங்கில், இந்திய வான்வெளி பாதுகாப்பு தொடா்பான அம்சங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட உள்ளன. ரஃபேல் விமானங்கள் அடுத்த மாதம் விமானப் படையில் சோ்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், அவற்றை லடாக் பகுதிக்கு அனுப்புவது குறித்தும், கிழக்கு லடாக், அருணாசலபிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் உள்ளிட்ட சீனாவின் எல்லையோர நிலவரங்கள் குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com