எல்லையில் பாக் அத்துமீறல்: பெண் காயம்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இரு இடங்களில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் காயமடைந்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இரு இடங்களில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

குப்வாரா மாவட்டத்தின் தங்தாா் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். கிராமங்களைக் குறிவைத்து அவா்கள் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளது. பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரா்கள் தகுந்த பதிலடி கொடுத்தனா்.

அதேபோல், பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பா செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இடங்களில் பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் உரிய பதில் தாக்குதல் நடத்தினா். எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடா்ந்து இது 3-ஆவது நாளாகும் என்று ராணுவ அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com