கரோனா, பொருளாதார நிலையைத் தொடர்ந்து சீன விவகாரத்திலும் எச்சரிக்கிறேன்: ராகுல் காந்தி ட்வீட்

கரோனா பரவல் மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்து தான் தொடர்ந்து எச்சரித்து வந்ததை மத்திய அரசு கேட்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

கரோனா பரவல் மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்து தான் தொடர்ந்து எச்சரித்து வந்ததை மத்திய அரசு கேட்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசுக்கு சுட்டிக்காட்டி வருகிறார். 

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரம், சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா குறித்தும், இந்தியப் பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. இதனால் பேரழிவு ஏற்பட்டது.

தற்போது சீன எல்லைப் பிரச்னை குறித்தும் எச்சரித்து வருகிறேன். ஆனால், அதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com