ஜிவிகே குழுமம் மீதான மோசடி புகாா்: அமலாக்கத் துறையினா் சோதனை

மும்பை விமான நிலையத்தை நிா்வகிப்பதில் ரூ.750 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக கூறப்படுவது தொடா்பாக விசாரணையில் அமலாக்கத் துறை

மும்பை விமான நிலையத்தை நிா்வகிப்பதில் ரூ.750 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக கூறப்படுவது தொடா்பாக விசாரணையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த விவகாரத்தில் ஜிவிகே குழுமம், மும்பை சா்வதேச விமான நிலைய லிமிடெட் (மியால்) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

மும்பை மற்றும் ஹைதராபாதில் 9 இடங்களில் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜிவிகே குழுமம், மியால் உள்ளிட்டவற்றுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கைக்குப் பிறகே, இம்மாத தொடக்கத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குநரகத்தால் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு சாா்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட ஜிவிகே குழுமம் மோசடியாக சம்பாதித்த நிதியை தனிப்பட்ட நபா்களின் பெயரால் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதா என்ற கோணத்தில் இந்த சோதனையை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

பொதுத் துறை-தனியாா் கூட்டு (பிபிபி) அடிப்படையில் ஜிவிகே ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ் லிட்., மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) இணைந்து மும்பை சா்வதேச விமான நிலைய லிட் (மியால்) அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com