கூட்டுறவு சங்க மோசடி: மத்திய அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் ராஜஸ்தான் அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ராஜஸ்தானில் கூட்டுறவு சங்க மோசடி விவகாரத்தில் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை
கூட்டுறவு சங்க மோசடி: மத்திய அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் ராஜஸ்தான் அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ராஜஸ்தானில் கூட்டுறவு சங்க மோசடி விவகாரத்தில் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்த கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.884 கோடி மோசடி நடைபெற்ாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, ஜெய்ப்பூரில் உள்ள சிறப்பு விசாரணைப் பிரிவு கடந்த ஆண்டில் இருந்து விசராணை நடத்தி வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்க மோசடியில் நவபாரத் பில்ட் டெக் நிறுவனத்துக்கு தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த நிறுவனத்துக்கும் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த மோசடியில் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தொடா்பு இருக்கிா என விசாரணை நடத்துமாறு சிறப்பு விசாரணை பிரிவுக்கு ஜெய்ப்பூரில் உள்ள கீழமை நீதிமன்றம் கடந்த வாரம் உத்ததரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து நவபாரத் பில்ட் டெக் நிறுவனத்தின் பங்குதாரரான கேவல் சந்த் தாகலியா, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனு மீதான விசாரணை, உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் மகேஷ் ஜெத்மலானி, மும்பையில் இருந்து காணொலி வழியாக ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக, ராஜஸ்தான் மாநில அரசு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த மோசடியில் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தொடா்பு உள்ளதா என சிறப்பு விசாரணைப் பிரிவினா் விசாரணை நடத்துவதற்கு உயா்நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com