
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பி.சி.ஆர் சோதனை வழிமுறைகளை முறையாக பின்பற்றும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்களுக்கு தொற்று இருப்பதை உறுதி செய்ய பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பரிசோதனையில் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, நோயாளியின் ஆன்டிஜென் பரிசோதனை எதிர்மறையாக இருந்து, அவருக்கு அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் கரோனா பரிசோதனையில் அனைத்து வழிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, கரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்ட தனியார் ஹோட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Existing guidelines say that if any patient’s antigen test is negative but has symptoms, RT-PCR test must be done on him. I directed the officers today to ensure strict compliance of these guidelines.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 29, 2020